இலை வடை
தேவையான பொருட்கள்
பலாச்சுளை - 10
வெல்லம் - 1/4 கிலோ
ஏலம் - 5
நெய் - 1 கரண்டி
சதுரமாக வெட்டிய வாழை இலை - 10 துண்டுகள்
அரிசிமாவு - 2 தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - 1 கிண்ணம்

செய்முறை
பலாச்சுளைகளில் கொட்டை, சவ்வு நீக்கி எடுத்து நறுக்கி வேக வைக்கவும். மத்தால் மசித்து வெல்லம், தேங்காய்த்துருவல், ஏலப்பொடி போட்டுக் கிளறி 1 ஸ்பூன் நெய்விட்டு பூரணமாகக் கிளறவும். பூரணம் ஆறினவுடன் உருட்டி வைக்கவும்.

சதுரமான இலைத் துண்டுகளைத் துடைத்து சுத்தம் செய்யவும். மாவை 1 கிண்ணம் தண்ணீர், 2 தேக்கரண்டி சர்க்கரை போட்டு தோசைமாவு போலக் கலக்கவும். 1 தேக்கரண்டி நெய் விடவும். இலைத் துண்டில் 1 தேக்கரண்டி மாவு ஊற்றி வட்டமாக்கவும். நடுவில் சிறிது பூரணத்தை வைத்து டயமண்ட் ஷேப்பில் மடக்கைத் திருப்பி வைக்கவும். எல்லா இலைகளிலும் இதுபோல் செய்து இட்லித்தட்டில் வேக வைக்கவும். ஆறினவுடன் எடுத்து அழகாகப் பரிமாறவும். ருசியான இனிப்பு இது.

பின்குறிப்பு: இலையைக் கவிழ்த்து வைத்தால்தான் விட்டுப் போகாமல் இருக்கும். இது மிக முக்கியம். இந்த இனிப்பு கேரளாவுக்கே உரித்தானது. இப்போது எல்லா ஊருக்கும் பிடித்தமான இனிப்பாக உள்ளது.

அலமேலு ராமகிருஷ்ணன்,
கலிஃபோர்னியா

© TamilOnline.com