BTS: தமிழ்ப் புத்தாண்டு விழா
ஏப்ரல் 26, 2012 அன்று பாரதி தமிழ்ச் சங்கம் மில்பிடாஸ் நகர ஜெயின் கோவில் கலையரங்கில் முத்தமிழ்ச் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் தமிழ்ப் புத்தாண்டைக் கோலாகலமாகக் கொண்டாடியது. ப்ரவீன் விப்ரநாராயணன் பாடிய கடவுள் வாழ்த்துடன் துவங்கிய இந்த விழாவில் ஏராளமான சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் பிற கலைஞர்கள் அளித்த கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து இப்பகுதியின் மெல்லிசைப் பாடகர்கள் இன்னிசை நிகழ்ச்சி ஒன்றை வழங்கினார்கள். சென்னையில் இருந்து வந்திருந்த ஸ்ரீகுமாரி அவர்கள் வாய் விசிலினால் பாடிய 'கிருஷ்ணா முகுந்தா' பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது.

திருமலை ராஜன்,
ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com