சிகாகோ: வறியவர்க்கு உணவு
மே 20, 2012 அன்று இடைமேற்கு மாநிலத் தமிழ்ச் சங்கம், உலகத் தமிழ்மொழி அறக்கட்டளை, அமெரிக்கத் தமிழ்ப் பள்ளிகள் மூன்றும் இணந்து தமிழீழத்துக்கென உயிர் நீத்த தமிழர்க்கு மரியாதை செலுத்தும் முகமாக அரோராவில் உள்ள Hesed House (659 S. River Road, Aurora, IL: 60506) இல்லத்தில் (வலையகம்: www.hesedhouse.org) வறியோர்க்கு உணவு வழங்கின. இதில் அமெரிக்கத் தமிழ்ப்பள்ளி மாணாக்கர்கள், சிகாகோ புறநகரில் வாழும் தமிழ்த் தொண்டர்கள் கலந்துகொண்டு உணவு தயார் செய்து எண்பதுக்கும் மேற்பட்டோர்க்கு உணவு வழங்கினர். அடுத்து வரும் காலை உணவிற்கென சிற்றுண்டியும் வழங்கினர். குழுமியிருந்த வறியோர் உணவு வழங்கியமைக்கு நன்றி தெரிவித்து விடை பெற்றனர். அமைப்புக்கள் சார்பில் வ.ச. பாபு நன்றி தெரிவித்தார்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com