எம்ஜிஆர்
'சிவாஜி' படத்தலைப்பு போலவே திரைப்படத் துறையினரால் மிகவும் விரும்பப்பட்ட தலைப்பு எம்ஜிஆர். ஆனால் அந்தத் தலைப்பில் படம் இயக்க அனைவரும் தயங்கிய வேளையில் தன் அடுத்த படத்துக்கு அப்பெயரைச் சூட்டியிருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி. விஷால் நாயகனாக நடிக்கிறார். கார்த்திகா கதாநாயகி. இசை: விஜய் ஆண்டனி. உண்மையில் எம்ஜிஆருக்கும் இந்தப் படத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. விஷாலுக்கு இதில் மூன்று வேடங்கள். மதன், கஜா, ராஜா என்ற அந்தப் பாத்திரங்களது பெயர்களின் முதல் எழுத்துக்கள்தான் எம்ஜிஆர்.



அரவிந்த்

© TamilOnline.com