கணிதப்புதிர்கள்
1) ஒரு பெட்டியில் 20 ரொட்டிகள் இருந்தன. அவற்றை ஆண்கள் தலா 4 வீதமும், பெண்களுக்குத் தலா 1 வீதமும், மீதமுள்ள குழந்தைகளுக்கு தலா 1/2 பங்கு வீதமும் பிரித்துக் கொண்டனர். ரொட்டியின் எண்ணிக்கையும் அவர்களின் எண்ணிக்கையும் சமமாக இருந்தது என்றால் ஆண், பெண், குழந்தைகள் எத்தனை பேர்?

2) ஒரு ஆலமரத்தில் சில பறவைகள் தங்கியிருந்தன. அதுபோல அரச மரத்திலும் சில பறவைகள் தங்கியிருந்தன. ஆலமரத்தில் தங்கியிருக்கும் பறவைகளைப் போல அரசமரத்தில் தங்கியிருக்கும் பறவைகளின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகமாக உள்ளது. இரண்டு மரப் பறவைகளின் எண்ணிக்கையைக் கூட்டினால் வரும் தொகையை விட, இரண்டு மரப் பறவைகளின் எண்ணிக்கையைப் பெருக்கினால் வரும் தொகையும் நான்கு மடங்கு அதிகமாக உள்ளது என்றால் இரண்டு மரங்களிலும் உள்ள பறவைகளின் எண்ணிக்கை எவ்வளவு?

3) 10, 21, 33, 46, ... வரிசையில் அடுத்து வருவது எது, ஏன்?

4) ஒரு தோப்பில் ஒவ்வொரு ஐந்து தென்னை மரங்களுக்கும் இரண்டு மா மரங்களை நட்டுள்ளனர். மாமரங்களின் எண்ணிக்கையை விட தென்னை மரங்களின் எண்ணிக்கை 24 அதிகமாக உள்ளது என்றால் அந்தத் தோப்பில் இருந்த மாமரங்கள் எத்தனை, தென்னை மரங்கள் எத்தனை?

5) ராமு, சோமுவை விட நான்கு வயது பெரியவன். ராமு வயதின் வர்க்கத் தொகையிலிருந்து சோமு வயதின் வர்க்கத் தொகையைக் கழித்தால் மீதி 80 வரும் என்றால், ராமுவின் வயது என்ன, சோமுவின் வயது என்ன?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com