பொன்னி சாதம்
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 1/2 கிண்ணம்
தேங்காய்த் துருவல் - 1/2 கிண்ணம்
சிவப்பு மிளகாய் - 8
மிளகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 2 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - 1 துண்டு
முந்திரிப் பருப்பு - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - சிறிதளவு
சாம்பார் வடகம் - சிறிதளவு
எண்ணெய் - சிறிதளவு
சாதம் (வடித்தது) - 2 கிண்ணம்

செய்முறை
சாதம் வடித்து உதிராக வைக்கவும். துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய், மிளகு, பெருங்காயம், முந்திரி எல்லாவற்றையும் சிறிது எண்ணெய் விட்டுச் சிவக்க வறுக்கவும். தேங்காய்த் துருவலையும் சிறிது வறுத்துக் கொண்டு, தேவையான அளவு உப்புச் சேர்த்து மிக்ஸியில் பொடி செய்யவும். வாணலியில் எண்ணெய் விட்டுக் கடுகு, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு தாளித்து கறிவேப்பிலைப் பொடியும் போட்டு வறுத்துக் கொள்ளவும். வடித்து வைத்துள்ள சாதத்துடன் பொடிகள், தாளித்தவை எல்லாம் போட்டு நன்றாகக் கலந்து கொள்ளவும். வடகத்தை வறுத்து மேலாகப் போட்டுச் சாப்பிடலாம். மிகவும் சுவையான ஒரு சாதம் இது. மேலாக மீதமுள்ள முந்திரியை வறுத்துப் போட்டுக் கொண்டால் சூப்பர் சுவை!

தங்கம் ராமசாமி,
பிரிட்ஜ்வாடர், நியூ ஜெர்சி

© TamilOnline.com