சுவாமி சுகபோதானந்தா அமெரிக்க விஜயம்
2012 மே 24, 25 தேதிகளில் பூஜ்ய சுவாமி சுகபோதானந்தா சான் ஹோசே Divine Science Community அரங்கில் பகவத் கீதை உரையும், 26ம் தேதி 'Managing LIFE Creatively' என்ற செயல்பட்டறையும் நடத்த இருக்கிறார். மற்றொரு செயல்பட்டறையை ஜூன் 1, 2 தேதிகளில் பிட்ஸ்பர்க் சிவா விஷ்ணு கோவிலில் வழங்க இருக்கிறார்.

பகவத் கீதையின் சாரத்தை சுவாமிஜி விளக்குகையில், “வாழ்க்கை ஒரு போர்க்களம்போல இருக்கிறது. நமது உறவுகளில் ஒருமை இருப்பதில்லை. தினசரி வாழ்வில் குழப்பம் மேலோங்கி இருக்கிறது. வேலை பார்க்கும் இடத்தில் போராட வேண்டி இருக்கிறது. எனவே கீதை நடந்த சூழல் போர் என்பது மிகப் பொருத்தமாகவே இருக்கிறது” என்கிறார். வாழ்வின் எல்லா தளங்களிலும் ஒருமை, ஒழுங்கு, சீர்மை, அமைதி ஆகியவற்றைப் பெற கீதை அளிக்கும் வழியை சுவாமிஜி அழகாக விளக்கிப் பேசுவார்.

இதைக் கூறுவது எளிது, நடைமுறைக்குக் கொண்டுவர நமது எண்ணங்கள், உணர்வுகள், எந்தக் கண்ணோட்டத்தோடு பார்க்கிறோம் என்பவற்றை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். அது நமது வாழ்க்கைத் தரத்தில் மிகப்பெரிய மாறுதலைக் கொண்டுவரும். இதைத்தான் உன்னை உணர வேண்டும் என்று அர்ஜுனனுக்கு கண்ணபிரான் போர்ச் சூழலில் விளக்குகிறார். வெற்றியா, தோல்வியா என்பது பெரிதல்ல. ஒருவரின் உள்ளார்ந்த குணம் மாறவில்லை என்றால் ஒரு போருக்குப் பின் இன்னொரு போர் என்று வந்துகொண்டேதான் இருக்கும். நமது மனதுதான் சொர்க்கம் அல்லது நரகத்துக்கான கதவைத் திறக்கிறது. நமது மனது சொர்க்கத்தில் வாழப் பழக வேண்டும்.

மேற்கொண்டு விபரங்களுக்கு
வலையகம்: www.swamisukhabodhananda.org
மின்னஞ்சல்: toshakila@gmail.com, bathinarajani@yahoo.com, vskamala@yahoo.com

நூ. சகிலா பானு,
சன்னிவேல்

© TamilOnline.com