நானி நடிக்கும் நான் ஈ
தெலுங்கில் மகதீரா போன்ற பிரம்மாண்ட படங்களை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமௌலி தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்கும் படம் 'நான் ஈ'. தெலுங்குப் பட நாயகன் நானி நாயகனாக நடிக்க, சமந்தா கதாநாயகியாக நடிக்கிறார். சந்தானம் முக்கிய வேடத்தில் தோன்றுகிறார். எதிரிகளை ஒரு ஈ எப்படிப் பழி வாங்குகிறது என்பதுதான் படத்தின் கதை. வசனம்: க்ரேஸி மோகன். மதன் கார்க்கி பாடல்களை எழுத, இசையமைக்கிறார் மரகத மணி. இதில் கிராஃபிக்ஸ் வேலை சூப்பர் என்கிறது ஒரு கோலிவுட் குருவி.



அரவிந்த்

© TamilOnline.com