தெரியுமா?: நீங்களும் ஆகலாம் 'சென்னை சூப்பர் கிங்'!
சென்னை சூப்பர் கிங்ஸ் டீஷர்ட்டில் கர்ஜித்துக் கொண்டு பாய்ந்து வரும் அந்த சிங்கத்தைப் பார்த்து சிலிர்க்காதவர் யார்! இன்னும் பலவகை டீஷர்ட்கள், வீட்டு/அலுவலக உபயோகப் பொருள்கள், தொப்பிகள், டைகள், ஆட்டக்காரர்கள் கையெழுத்திட்ட நினைவுப் பொருள்கள் என்று ஏராளமானவற்றை இப்போது உங்கள் வீட்டிலிருந்தே இணையம் வழியாக வாங்க வழியுண்டு. அதற்குக் கிளிக்குங்கள்: www.ShopSuperKings.com.

இந்த இணைய விற்பனையகத்தைச் சென்னையில் CSKயின் கேப்டன் 'ஹெலிகாப்டர் ஷாட்' எம்.எஸ். தோனி தொடங்கி வைத்தார். அதன் கோச் ஸ்டீவன் ஃப்ளெமிங், டி.எஸ். ரகுபதி (நிர்வாகத் தலைவர், இண்டியா சிமெண்ட்ஸ்), ராம் ராமநாதன் (தலைவர் மற்றும் CEO, இன்ஜீன் என்டர்டெய்ன்மென்ட், லாஸ் ஏஞ்சலஸ்) ஆகியோர் உடனிருந்தனர். "தொடங்கிய 3 வாரத்துக்குள்ளேயே ShopSuperKings.com சூப்பர்ஹிட் ஆகிவிட்டது. 14 நாடுகளிலிருந்து ரசிகர்கள் வாடிக்கையாளர்களாகிவிட்டார்கள்" என்கிறார் ராம் ராமநாதன். 'IPL ஃபீவர்' கொளுத்தும் இந்த நேரத்தில் உங்களுக்கும் பிடிக்கட்டும் சூப்பர் கிங்ஸ் 'மஞ்சள் காய்ச்சல்'!



© TamilOnline.com