வாழைக்காய் பக்கோடா
தேவையான பொருட்கள்
வாழைக்காய் - 3
வெங்காயம் (பொடியாய் நறுக்கியது) - 1 கிண்ணம்
இஞ்சி - சிறிதளவு
பச்சை மிளகாய் - 4
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
கடலை மாவு - 1/2 கிண்ணம்
அரிசி மாவு - 1/2 கிண்ணம்
மக்காச்சோள (கார்ன்) மாவு - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை (பொடியாய் நறுக்கியது) - சிறிதளவு
கொத்துமல்லி (பொடியாய் நறுக்கியது) - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - பொரிக்க
நெய் - சிறிதளவு

செய்முறை
வாழைக்காயை வேகவைத்துத் தோலை உரித்து, வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், இஞ்சி சேர்க்கவும். எல்லாவற்றையும் கடலை மாவு, அரிசி மாவு, கார்ன் மாவு, கறிவேப்பிலை, கொத்துமல்லி, நெய்யோடு கலந்து உப்புப் போட்டுப் பிசைந்துகொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் சிறிது சிறிதாகக் கிள்ளிப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். தக்காளி சாஸ், சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

தங்கம் ராமசாமி,
பிரிட்ஜ்வாடர், நியூ ஜெர்சி

© TamilOnline.com