மே 2012: தென்றல் குறுக்கெழுத்துப் புதிர்
குறுக்காக
3. அறிவுள்ள ஆண் மாணவர்க்கும் தேர்வில் அளிக்கப்படும் (5)
6. மேலோங்கிய காஞ்சி தயவில் காதல் இல்லாமலே மயக்கம் (4)
7. மலை வாசஸ்தலத்தில் திரும்பிய நல்ல சிரிப்பு பெரிதாக இல்லை (4)
8. உன்னதமான தன்மை மாசி பௌர்ணமியில் வடித்து இரண்டறக் கலந்தது (6)
13. புரளும் வைர மின் வெட்டில் அச்சமின்மை கொண்ட ஆள்பவர் குழு (6)
14. கருங்காலி வாலின்றிக் குதிக்கலாம் ஆனால் அறிவியல் அப்படிச் சொல்லவில்லை! (4)
15. சரியாகச் சமைத்த சொல்லா? புல்லில்லாத நீர் (4)
16. ஆசிரியருக்கு முந்திய வெளியிடுபவரின் கூற்று (5)

நெடுக்காக
1. கட்டு பிரியாதபடி கொண்டாட்டத்தை அடக்க வெளியே அமல் (5)
2. ஈடுபாடில்லாத் தன்மை அன்றைய முதல்வர் தலையைப் பின் வைக்கச் செய்தது (5)
4. வாழ்த்திக் கும்பிடுபவரிடம் வார்த்தை முழுதாக வராது (4)
5. அவருக்குப் போய்ச்சேரும்படி எழுதப்பட்டுள்ளது (4)
9. ஏழையின் நிலைக்கு எண்ணெயின்றி சட்டியில் புரட்டி பாதி பாரம் ஏற்று (3)
10. மண்ணின் மகளை மருமகளாய்க் கொண்டவன் (5)
11. வையாது மனசு சுரம் விட்ட பின்னர் கலந்தது நாவுக்குப் பிடித்தது (5)
12. இசையில் நுணுக்கமான செய்தி (4)
13. கல் நீக்கிய விநாயகருக்குரியது இன்னும் மலரவில்லை (4)

வாஞ்சிநாதன்

ஏப்ரல் 2012 விடைகள்

© TamilOnline.com