BATM: அட்சயா டிரஸ்ட்டுக்கு நிதி
மார்ச் 24, 2012 அன்று மில்பிடாஸில் உள்ள திருப்பதி பீமாஸ் உணவகத்தில் மதுரை அட்சயா டிரஸ்ட் நாராயணன் கிருஷ்ணன் அவர்களுக்கு வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் வரவேற்பு அளித்தது. மன்றத் தலைவர் பிரபு வெங்கடேஷ் வரவேற்று, கிருஷ்ணன் நிறுவி நடத்திவரும் அட்சயா டிரஸ்ட் மற்றும் அதன் அமெரிக்க நிறுவனம் பற்றிப் பேசினார். அடுத்து உபதலைவர் ஜெயப்ரகாஷ், கிருஷ்ணன் அவர்கள் CNN நிறுவனத்தின் ஹீரோவாக கவுரவிக்கப் பட்டதைப்பற்றிப் பேசினார். பின்னர் பிரபு கேட்ட கேள்விகளுக்கு கிருஷ்ணன் பதிலளித்தார்.

இக்கூட்டத்திற்கு லதா, கிருஷ்ணனின் தாயார் லக்ஷ்மி ஆகியோர் வந்திருந்தார்கள். கேள்வி நேரத்துக்குப் பின்னர் தமிழ் மன்றத்தின் சார்பில் நன்கொடை அளிக்கப்பட்டது. பீமாஸ் சார்பில் சுரேஷ் தவிரப் பார்வையாளர் பலரும் நன்கொடை அளித்தனர். இதன் சிறப்பம்சம் என்னவென்றால் தமிழரல்லாதோர் பலரும் வந்து பங்கேற்றதுதான்.



© TamilOnline.com