Rebelution
'Rebelution' என்ற பரதநாட்டிய நிகழ்ச்சி, வருகின்ற ஏப்ரல் 20, 21 தேதிகளில் மாலை 7 மணிக்கும், ஏப்ரல் 22ம் தேதி மதியம் 2.30 மணிக்கும் 1310 மிஷன் சாலை, சான் ஃபிரான்ஸிஸ்கோ, Counter Pulse தியேட்டரில் நடைபெற உள்ளது. இதில் பரதக்கலைஞர் வித்யா சுப்ரமணியன் நடனமாடுவார். எழுத்தாளர் ஜெயா பத்மனாபன், கவிஞர் அருண் குமார், நகைச்சுவை எழுத்தாளர் கல்பனா மோகன் ஆகியோரது படைப்புகளை ஆதாரமாகக் கொண்ட நிகழ்ச்சி இது. லாஸ்யா டான்ஸ் கம்பெனியின் கலை இயக்குனரான வித்யா சுப்ரமணியன் பரதத்தில் சமூகச் செய்திகளை உடன் இழைத்து வழங்குவதில் தேர்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com