மாதவி வெங்கடேஷ் நாட்டிய நிகழ்ச்சி
பிப்ரவரி 10, 2007 அன்று செல்வி மாதவி வெங்கடேஷின் தென்கலிபோர்னியா, புயானாபார்க் ஜெயின் மைய அரங்கில் நடன நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. நேஷனல் எண்டோமெண்ட்ஸ் ·பார் த ஆர்ட்ஸ், ஜேம்ஸ் இர்வின் பவுண்டேஷன் ஆகியவை அளித்த அறக்கொடையில் நடந்த இந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற கலைஞர்கள் அனைவருமே இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

‘நாத தனுமனிஸம்’, பைரவியில் வர்ணம், நீலாம்பரியில் ‘மாதவ மாமவ தேவா’ பாடல்களுக்கு மாதவியின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. காசி அய்சோலாவின் நட்டுவாங்கம், அனிருத் வெங்கடேஷின் வாய்ப்பாட்டு, சுபா சந்திரமெளளியின் மிருதங்கம், சிவா ராமமூர்த்தியின் வயலின் எல்லாம் மாதவியின் ஆட்டத்துக்கு அழகூட்டின.

பெர்க்லி பல்கலைக்கழகத்தில் பயோ எஞ்சினிரீங் பயிலும் மாதவி, புகழ்பெற்ற நடன ஆசிரியை விஜி பிரகாஷிடம் பத்து வருட காலம் நடனம் பயின்று அரங்கேற்றம் செய்தவர். இளைஞர்கள் இசை, நடனம் பயின்று அரங்கேற்றத்தோடு நிறுத்திவிடாமல் தொடர்ந்து கலைச்சேவையில் ஈடுபடுவது பாராட்டத்தக்கது. புலம் பெயர்ந்த இடத்திலும் நம் கலைகள் தழைத்தோங்குவது பெரு மகிழ்ச்சி தருவதாக இருக்கிறது.

எல்லே சுவாமிநாதன்

© TamilOnline.com