சன்ஹிதி: 'Perceptions-2012'
மார்ச் 2012 அன்று மதியம் 2:00 மணி தொடங்கி, 'புலப்பாடுகள்' எனப்பொருள்படும் 'Perceptions' என்ற பல்சுவை நிகழ்ச்சியை வளைகுடாப் பகுதியின் 'சன்ஹிதி' குழுவினர் வழங்கவுள்ளனர். 'அறம் செய்' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்துக்கு நிதி திரட்டுமுகமாக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியை சன்ஹிதி, வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றத்துடன் இணைந்து நடத்த உள்ளது. பாரம்பரிய பரத நாட்டியம் முதல் நாட்டுப்புற நடனம், திரைப்பட நடன வகைகளுடன் மேற்கத்திய நடன வகைகளும், நகைச்சுவைக் காட்சிகளும், கண்கவரும் மேடை அமைப்பும் கொண்டதாக இந்த நிகழ்ச்சி இருக்கும். இந்தியாவில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி தருவதற்கு இதில் திரட்டப்படும் நிதி பயன்படும்.

காட்சி நேரம்:
மார்ச் 31, 2012, சனிக்கிழமை: இரண்டு காட்சிகள் 2.00PM, 6:00PM ஏப்ரல் 1, 2012, ஞாயிற்றுக்கிழமை: 2.00PM
இடம்: Woodside Performing Arts Center, Woodside High School, 199 Churchill Ave., Woodside, CA 94062
நுழைவுச்சீட்டு: $20
தொடர்புக்கு:
பிரபு - 925.202.1176;
Ranjitha - 408.518.0646
மின்னஞ்சல்: sanhiti2012@gmail.com
விவரங்களுக்கு: www.perceptions2012.com

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com