கொண்டான் கொடுத்தான்


'பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்', 'வரவு எட்டணா செலவு பத்தணா', 'காலம் மாறிப்போச்சு', 'விரலுக்கேத்த வீக்கம்' போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய ஜி.ராஜேந்திரன் இயக்குநராக அறிமுகமாகும் படம் 'கொண்டான் கொடுத்தான்'. தலைமுறைகளாகப் பெண் கொடுத்து, பெண் எடுத்து கொண்டான் கொடுத்தானாக இருக்கும் இரு குடும்பங்களுக்கு இடையே நடைபெறும் பாசப்போராட்டம் படமாகிறது. படத்தை இயக்குவதுடன் கதை, வசனம், ஒளிப்பதிவு செய்கிறார் ராஜேந்திரன். கதிர் நாயகனாகவும், அத்வைதா நாயகியாகவும் நடிக்க இவர்களுடன் இளவரசு, கஞ்சா கருப்பு, ராஜ்கபூர், எல்.ராஜா, சுலக்ஷனா, லட்சுமி ராமகிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தேவா இசையமைக்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com