மறுமுகம்


ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் மற்றொரு முகத்தை அடையாளம் காட்ட வருகிறது மறுமுகம். தன்னை யாராவது நேசிக்கமாட்டார்களா என ஏங்கும் ஒரு பணக்கார இளைஞன் ஒருவன் ஒரு பெண்ணின்மீது காதல் கொள்கிறான். ஆனால் அந்தப் பெண்ணோ வாழ்க்கையில் முன்னுக்குவரத்‌ துடிக்கும் மற்றொரு ஏழை இளைஞனைக் காதலிக்கிறாள். அதனால் ஏற்படும் விளைவுகளை த்ரில்லராகச் சொல்ல வருகிறது 'மறுமுகம்'. இதில் பணக்காரப் பையனாக டேனியல் பாலாஜி, இன்னொரு நாயகனாக சிக்குபுக்கு அனுப் நடிக்க, நாயகியாக மும்பை புதுமுகம் ரன்யா நடிக்கிறார். மலேசியாவில் வெளிவந்த '12-ஹவர்ஸ்' படத்துக்கு கதை, திரைக்கதை எழுதிய கமல், இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். திரைப்படக் கல்லூரி மாணவர் கனகராஜ் ஒளிப்பதிவு செய்ய, அகஸ்தியா இசையமைக்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com