பில்லா-2
ரஜினி நடித்து வெற்றி பெற்று பின்னர் அஜித் நடிப்பில் கடந்த 2007ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் பில்லா. அப்படத்தின் இரண்டாம் பாகம் பில்லா-2 என்ற பெயரில் உருவாகி வருகிறது. தூத்துக்குடியில் சாதாரண டேவிடாக இருந்தவன் எப்படி பில்லாவாக மாறுகிறான் என்பது கதை. இதில் டேவிடாக அஜித் நடிக்க அவருக்கு ஜோடியாக பார்வதி ஓமணக்குட்டன் நடிக்கிறார். உன்னைப்போல் ஒருவன் படத்தை இயக்கிய சக்ரி ‌டோல்டி இதையும் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசை. விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.அரவிந்த்

© TamilOnline.com