லில்பர்ன் தமிழ்ப் பள்ளி: பண்டிகைக் கொண்டாட்டம்
டிசம்பர் 18, 2012 மதியம் சுவானீ, ஜார்ஜியா நூலகத்தில் 'லில்பர்ன் தமிழ்ப் பள்ளி' குடும்பத்தினர் பக்ரீத், தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகைகளை விமரிசையாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். குழந்தைகள் நடனம், பாடல்கள், நாடகம், வினாடி வினா எனப் பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்கி மகிழ்வித்தனர். ஒவ்வொரு பண்டிகையின் சிறப்பையும் பெரியவர்களும், குழந்தைகளும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டது நிறைவாய் இருந்தது. பெரியவர்களும் நாங்கள் எதிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்க தத்தம் கலைத்திறமைகளை கண்முன் கொண்டு வந்தனர்.

செய்தி: உமா பாபா, இரவி பழனியப்பன்
படங்கள்: சாய், நித்யா

© TamilOnline.com