சிமி வேல்லி: குடியரசு தினம்
ஜனவரி 28, 2012 அன்று 'சிமி வேல்லி பேட்ரியட்ஸ்' அமைப்பு ஒய்ட் ஓக் எலிமெண்டரி பள்ளி அரங்கத்தில் குடியரசு தினத்தைக் கொண்டாடிற்று. விழாவில் கலந்து கொண்ட அனைவரும் இந்தியக் கொடியின் மூவண்ணத்தில் ஆடை அணிந்து

வந்திருந்தது கண்கொள்ளாக் காட்சி. இனிய நடனங்கள், பாடல்கள், பியானோ இசை, தற்காப்புக் கலை விளக்கம், நாடகம் எனக் குழந்தைகளும் பெரியோர்களும் மேடையில் தூள் கிளப்பினர்.

கடந்த சில மாதங்களாக இந்த நிகழ்ச்சிக்கான முன்னோட்டமாக டென்னிஸ், வாலிபால், டேபிள் டென்னிஸ், சமையல், புகைப்படம் போன்றவற்றில் போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றோருக்கு விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன.

ஐந்து குடும்பங்கள் சேர்ந்து துவங்கிய 'Simi Valley Patriots' ஐம்பது குடும்பமாக வளர்ந்துள்ளது. இதன் நோக்கம் நம் குழந்தைகளுக்கு இந்திய கலாசாரம், பண்பாடு, தேசப்பற்று ஆகியவற்றுடன் சேர்த்து தமது திறமைகளை

வளர்ப்பது. அமைப்பின் வயது 4. இந்த ஆண்டிலிருந்து, இந்தியாவில் உள்ள திறமிக்க ஏழை மாணவர்களுக்கு உதவும் 'STEP' என்னும் அமைப்புக்கு உதவ முடிவு செய்யப்பட்டுள்ளது.

செய்திக் குறிப்பிலிருந்து

© TamilOnline.com