சாட்டை


பள்ளி மாணவர்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகி வரும் படம் சாட்டை. இதில் நாயகனாக சமுத்திரகனி நடிக்கிறார். நாயகியாக மகிமா அறிமுகமாகிறார். பிரபல இயக்குநர் பீம்சிங்கின் மகன் கோபி பீம்சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். உடன் இளம் நாயகனாக யுவன் அறிமுகமாகிறார். தம்பி ராமையா சிறப்பு வேடத்தில் தோன்றுகிறார். 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களிடையே படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஆசிரியராக சமுத்திரகனி நடிக்கிறார் என்பது கொசுறு தகவல். படத்தின் கதை திரைக்கதை, வசனம், எழுதி அன்பழகன் இயக்குகிறார். இசை டி. இமான்.

அரவிந்த்

© TamilOnline.com