தாண்டவம் ஆடும் விக்ரம்


'தெய்வத்திருமகள்' படத்திற்குப் பிறகு இயக்குநர் விஜய், கதை, திரைக்கதை எழுதி இயக்கும் படம் தாண்டவம். இதில் நாயகனாக விக்ரம் நடிக்கிறார். மற்றொரு கதாநாயகனாகப் பிரபல தெலுங்கு நடிகர் ஜகபதி பாபு நடிக்கிறார். நாயகிகளாக அனுஷ்கா, ஏமி ஜாக்சன் நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் நாசர், சந்தானம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பாடல்களை நா.முத்துகுமார் எழுத, ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விக்ரம் நடிக்கும் முழுநீள ஆக்‌ஷன் படம் இது.

அரவிந்த்

© TamilOnline.com