புதினா பாத்
தேவையான பொருட்கள்:
அரிசி - 1 கிண்ணம்
புதினா (ஆய்ந்தது) - 1 கிண்ணம்
வெங்காயம் (நடுத்தரமானது) - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
தேங்காய்த் துருவல் - 1/4 கிண்ணம்
புளி - சிறிதளவு
சீரகம் - சிறிதளவு
நெய் - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
சமையல் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
காரப்பொடி - 1/2 தேக்கரண்டி

செய்முறை:
சாதத்தை உதிர் உதிராக வடித்து ஆற வைத்துக் கொள்ளவும். புதினாவைக் கழுவி வாணலியில் சிறிதளவு நெய் ஊற்றி வதக்கிக் கொள்ளவும். அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம் தாளித்து வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். ஐந்து நிமிடம் கழித்து அதில் தக்காளியைப் போட்டுச் சுருள வதக்கவும். அத்துடன் பச்சை மிளகாய், காரத்திற்கு ஏற்ப மிளகாய்ப் பொடி சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இந்தக் கலவையுடன் வதக்கி வைத்துள்ள புதினா, தேங்காய்த் துருவல், புளி சேர்த்து மிக்ஸியில் நைசாகச் சட்னிபோல் அரைத்துக் கொள்ளவும். இந்தப் புதினா மசாலா கலவையை ஆற வைத்துள்ள சாதத்தின்மேல் போட்டு, உப்புப் போட்டு சிறிது நெய் ஊற்றி நன்கு கலக்கவும். அப்புறம் என்ன, பௌலில் எடுத்துக் கொண்டு போய்ப் பரிமாற வேண்டியதுதான். தொட்டுக்கொள்ள பொரித்த வடாம் அல்லது அப்பளம் வெகு ஜோர்!

பிரேமா நாராயணசுவாமி,
ஆல்ஃபரெட்டா, ஜார்ஜியா

© TamilOnline.com