ஜான்ஸ் க்ரீக்: ஸ்ரீ ஜகந்நாதர் ரத யாத்திரை
டிசம்பர் 3, 2011 அன்று, ஐந்தாம் ஆண்டு ஜான்ஸ் க்ரீக் நிறுவனர் தின அணிவகுப்பு ஜார்ஜியாவில் நடந்தது. அதில் கௌடிய வைணவ சங்கத்தின் (GVA) நிறுவன ஆச்சாரியரான சுவாமி பக்தி ஸ்வரூப தீர்த்த மஹராஜ் அவர்களின் வழிகாட்டுதலில் சங்க உறுப்பினர்கள் ரத யாத்திரை நடத்தினார்கள்.

அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் பகவான் ஸ்ரீ ஜகந்நாதர், ஸ்ரீ பலதேவர், ஸ்ரீ சுபத்ரா தேவியை பக்தர்கள் கொண்டு வந்தனர். வழியெங்கும் நாம சங்கீர்த்தனம் நடத்தப்பட்டது. ஜான்ஸ் க்ரீக் மேயர் மைக்கேல் போட்கர், புல்டன் மற்றும் ராஸ்வெல் நகர காவல்துறை அதிகாரிகள் உட்பட பல முக்கிய பிரமுகர்களுக்கு இந்தியாவின் புனித பிருந்தாவனத்திலிருந்து வரவழைக்கப்பட்ட மாலை மற்றும் சால்வைகள் வழங்கப்பட்டன. சங்கத்தின் ஆண்டு மலரான பகவத் வாணி பிரதிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன.

ஜான்ஸ் க்ரீக் ஹெரால்ட் வாரப் பத்திரிகையின் ஆசிரியர் மாத்தீவ் குவின் சங்கத்தின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரைப் பேட்டி கண்டார். ஜான்ஸ் க்ரீக் அணிவகுப்பில் கௌடிய வைணவ சங்கம் தொடர்ந்து இரண்டு வருடங்களாக ரத யாத்திரையை நடத்தி வருகிறது.

மேலும் விவரங்களுக்கு: www.gva.in
தொலைபேசி: 1-888-9GVA-USA

பத்ரி நாராயணன்

© TamilOnline.com