இந்திய கிறிஸ்து சபை: கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
இந்திய கிறிஸ்து சபை (Christ Church of India) தனது கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் வழியே பாரதத்தை விரிகுடாப் பகுதிக்குக் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறது! எப்படி என்கிறீர்களா? தேவகுமாரனின் பிறந்த நாளை, தாண்டியா, கதக் போன்ற நடனங்களுடனும், பெரியவர்களும் இளைஞர்களும் தனித்தனியே வழங்கும் கிறிஸ்துமஸ் நாடகங்களுடனும் கொண்டாட உள்ளது. இத்தோடு வெவ்வேறு இந்திய மொழிகளில் கிறிஸ்துமஸ் பாடல்கள், டாக்டர் ரமேஷ் ரிச்சர்டு (டல்லாஸ் இறையியல் கல்லூரி) வழங்கும் நற்செய்தி, 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கிறிஸ்துமஸ் பரிசுகள், சுவையான உணவு, இலவச பைபிள், பொம்மலாட்டம் இன்னும் பல சுவையான அம்சங்கள் இதில் இடம்பெறும்.

கீழ்க்கண்ட தேதி மற்றும் இடங்களில் இந்த நிகழ்வு நடைபெறும்:
டிசம்பர் 3, சனிக்கிழமை: India Community Center, Milpitas. 525 Los Coches, St. Milpitas மாலை 4: மணி.
டிசம்பர் 10: சனிக்கிழமை: Christ Church of India 460 - S Cypress Ave., San Jose, CA 95117
டிசம்பர் 17, சனிக்கிழமை: Christ Church of India, San Ramon…20801 (Church of the Hill) San Ramon Valley Blvd., San Ramon, 94583.

பாஸ்டர் ரஞ்சன் சாமுவேல்,
சான் ஹோசே, கலி.

© TamilOnline.com