கொண்டான் கொடுத்தான்


கதிர் நாயகனாகவும், அத்வைதா நாயகியாகவும் நடிக்க, ஜி. ராஜேந்திரனின் கதை, வசனம், ஒளிப்பதிவு, இயக்கத்தில் உருவாகி வரும் படம் கொண்டான் கொடுத்தான்.தலைமுறைகளாகப் பெண் கொடுத்து, பெண் எடுத்து கொண்டான் கொடுத்தானாக இருக்கும் இரண்டு குடும்பங்களுக்கு இடையே நடக்கும் பாசப்போராட்டம்தான் படத்தின் கதை. முக்கிய வேடங்களில் இளவரசு, கஞ்சா கருப்பு, ராஜ்கபூர், எல். ராஜா, சுலட்சனா, லட்சுமி ராமகிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இசை: தேவா.

அரவிந்த்

© TamilOnline.com