விஸ்வரூப பூஜா
நடிகர் கமல்ஹாஸன் கதை எழுதி இயக்கி நடிக்கும் புதிய படம் விஸ்வரூபம். இதில் கதாநாயகியாக நடிக்க அமெரிக்காவில் மிஸ் இந்தியா பட்டம் வென்ற நியூயார்க் அழகி பூஜா குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே நடிப்பிற்காக

பல விருதுகள் பெற்றவர். இவர்களுடன் பிரபல ஹிந்திப் பட இயக்குநர் சேகர் கபூர், ராகுல் போஸ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பாடல்கள்: வைரமுத்து. இசை: ஷங்கர் மஹாதேவன்-இஸான்-லாய்



அரவிந்த்

© TamilOnline.com