பிரேமா நாராயணன் (கேன்டன், மிச்சிகன்)
தென்றலில் சமையல் குறிப்புகள் எழுதி வந்த பிரேமா நாராயணன் (68) சென்னைக்குச் சென்றிருந்த சமயத்தில் அக்டோபர் 29, 2011 அன்று உயிர்நீத்தார். புது டெல்லியில் பிறந்த இவர், தந்தையுடன் அமெரிக்கா வந்தபோது வாஷிங்டன் டி.சி.யில் உள்ள இந்திய தூதரகத்தில் நடனம் ஆடியுள்ளார். 1962ல் நாராயணன் அவர்களோடு திருமணம் ஆனது. மணிகளால் கலைத்திறமிக்க கைவேலை செய்தல், கவிதை எழுதுதல் எனப் படைப்பாற்றல் மிக்கவராக விளங்கினார். கேன்டன், மிச்சிகனுக்குத் தன் மகனோடு வந்தபின் 2009 முதல் தென்றலுக்குத் தொடர்ந்து எழுதி வந்தார். இவரது சமையல் குறிப்புகள் India Abroad இதழிலும் வெளிவந்துள்ளன.

இவரது மறைவினால் வருத்தமுற்றிருக்கும் கணவர், இரண்டு மகன்கள்/மருமகள்கள், நான்கு பேரக்குழந்தைகள் ஆகியோருக்குத் தென்றல் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.© TamilOnline.com