மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி கலிபோர்னியா, மிச்சிகன் வருகை
2011 நவம்பர் 20 முதல் டிசம்பர் 1 வரை, 'அம்மா' ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி கலிபோர்னியா வளைகுடாப் பகுதிக்கும், மிச்சிகனில் உள்ள டியர்பார்னுக்கும் வருகை தர இருக்கிறார். 'அரவணைக்கும் ஞானி' (Hugging Saint) என்று அழைக்கப்படும் அம்மா மனித இனத்திற்கு அயராது சேவை செய்கிறார்.

அம்மா வருகை தர இருக்கும் ஊர்களும், தேதிகளும்:

சான் ரமோன், கலிபோர்னியா - நவ. 20 - நவ. 25
டியர்பார்ன், மிச்சிகன் - நவ. 27 - டிச. 01

இரண்டு இடங்களிலும், இலவச பொது நிகழ்ச்சிகள் மற்றும் ஆன்மீக முகாம்கள் நடைபெற உள்ளன. பொது நிகழ்ச்சிகளில் அம்மாவின் தரிசனம், ஆன்மீக சொற்பொழிவு, தியானம் மற்றும் பஜனை நடைபெறும். ஆன்மீக முகாமில் ஆன்மீக/தியான வகுப்புகள், தன்னலமற்ற சேவை, அம்மாவோடு கேள்வி-பதில், அம்மாவின் உணவுப் பரிமாற்றம், ஒருங்கிணை அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியவை நடைபெறும்.

மக்களின் மேம்பாட்டுக்காக அம்மா ஆற்றும் பொதுநலத் தொண்டுகள் பற்றி அறிய: www.amritapuri.org தளத்தில் அறியலாம்.

மேலும் விபரங்களுக்கு: www.amma.org

சூப்பர் சுதாகர்

© TamilOnline.com