நவம்பர் 2011: ஜோக்ஸ்
நோயாளி: டாக்டர்... டாக்டர்.. எனக்கு வயித்துல ரயில் ஓடற மாதிரி அடிக்கடி சத்தம் கேட்குது டாக்டர்.
டாக்டர்: (வயிற்றைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு) அப்படியா... எனக்கு ஒண்ணும் கேட்கலியே...
நோயாளி: ஒருவேளை சிக்னல்ல நிக்குதோ!

*****


நோயாளி: டாக்டர் எனக்கு ஒரே கூச்சமா இருக்குது
டாக்டர்.
டாக்டர்: பரவாயில்லை, விடுங்க. இங்க நீங்களும் நானும் மட்டும்தான் இருக்கோம். எதையும் மறைக்காம, கூச்சப்படாம உண்மையச் சொல்லலாம் நீங்க.
நோயாளி: அய்யோ,... டாக்டர், எனக்கு பல்லுல ஒரே கூச்சமா இருக்குன்னு சொல்ல வந்தேன்.

*****


வேணு: ஏன், உன் காதலி உனக்கு மோதிரம் போட்டப்புறமும் ரொம்ப சோகமா இருக்கே..?
சீனு: அஞ்சாறு பேர் கைமாறி வந்த அதிர்ஷ்ட மோதிரங்க இதுன்னு சொல்லிட்டுப் போறாளே.

அதிர்வெடி

© TamilOnline.com