சான் டியேகோ தீபாவளி
அக்டோபர் 23, 2011, ஞாயிறு அன்று சான் டியேகர்கள் அங்குள்ள இந்திய வம்சாவளியினருடன் இணைந்து பால்போவா பார்க்கில் பேரணி, 1008 திருவிளக்கேற்றல், வண்ணமயமான நடனங்கள், இசை, இந்துப் புராண நாடகங்கள் மற்றும் இந்திய உணவு வகைகள் எனக் கோலாகலமாக தீபாவளியைக் கொண்டாட உள்ளனர். சான் டியேகோ இந்திய-அமெரிக்கச் சங்கம் (மிங்கேய் பன்னாட்டுக் காட்சியகம், சான் டியேகோ கலைக் காட்சியகம், இந்திய உபகண்டக் கலைக் குழு, இந்தியச் சங்கங்கள், சான் டியேகோ மானுடக் காட்சியகம் ஆகியவற்றின் ஆதவரவுடன்) இந்தப் பெருவிழாவை ஏற்பாடு செய்துள்ளது.

எல் ப்ராடோ பாதையில் ஆங்காங்கே மாலை 4:00 மணிமுதல் வெவ்வேறு இந்திய மாநிலத்தவர் தமது கலாசார பாரம்பரியத்தைச் சித்திரித்து நிற்பர். மாலை 6:00 மணிக்கு ஆர்கன் பெவிலியனியல் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். நான்காவது ஆண்டாக இந்த விழா 6:15க்கு 1008 விளக்கேற்றும் நிகழ்ச்சி தொடங்கும்.

மேலும் தகவல் பெற: 858-324-1992

பத்மா நாகப்பன்,
சான் டியேகோ

© TamilOnline.com