அக்டோபர் 2011: ஜோக்ஸ்
எம் மனைவி ரொம்ப சண்டை போட்டா நான் நாலு போட்டாதான் அடங்குவா.
என்னடா சொல்றே? மனைவியை அடிப்பயா?
நான் தோப்புக்கரணம் போடறதைச் சொன்னேன்.

சந்திரசேகரன்,
லண்டன்.

*****


ஏண்டா பக்கத்து வீட்டுல புருஷன் பொண்டாட்டி சண்டை போட்டா நீ தோட்டத்துக்கு ஓடறே?
பாத்திரமேல்லாம் நம்ம தோட்டத்துலதானே வந்து விழும்!

சந்திரசேகரன்,
லண்டன்.

*****


ராத்திரி தூக்கத்துல நீங்க என்னை ரொம்பத் திட்டிட்டீங்க!
யாரு சொன்னா நான் தூங்கிக்கிட்டு இருந்தேன்னு?

சந்திரசேகரன்,
லண்டன்.

*****


ஹரி: அடடா.. என்ன இது... டி.வி. சீரியலைப் பார்த்து இப்படி பொம்பளை மாதிரி அழுதுக்கிட்டு இருக்கீங்களே...
கிரி: அட நீ வேறப்பா.. இது என்னோட கல்யாண சி.டி.

அதிர்வெடி

*****


பெண்: முப்பத்தொம்பதுக்கு மேல குழந்தை பெத்துக்க வாய்ப்பு இருக்கா, டாக்டர்?
டாக்டர்: ஓ... தாராளமா! அது சரி, அத்தனை குழந்தைங்க எதுக்கு... கின்னஸ் சாதனைக்கா?!

அதிர்வெடி

© TamilOnline.com