ஒரு வாக்கு மூலம்
நீதிபதி: ஒரே வாரத்தில் நீ பத்து இடங்களில் கொள்ளை அடித்திருக்கிறாய். அதைப்பற்றி ஏதேனும் சொல்ல விரும்புகிறாயா?

கைதி: ஆமாங்க. என்னைப்போல எல்லாரும் கடினமா உழைச்சாங்கன்னா, நம்ம நாடு கண்டிப்பா சீக்கிரம் முன்னேறிடுங்கய்யா.

*****


ஒரு கடிதம்

வருமானத்துறை அதிகாரிகளுக்கு,

வணக்கம்.

வருமானவரி சரிவர செலுத்தாததால், என்னால் இரவு நேரத்தில் தூங்க முடிவதில்லை. அதனால் இக்கடிதத்துடன் 200 டாலருக்கான காசோலையை அனுப்புகிறேன். இதன் பிறகும், தூக்கமின்மை ஏற்பட்டால், மீதியையும் அனுப்ப முயற்சிக்கிறேன்.

நன்றி....

ஸ்ரீகோண்டு

© TamilOnline.com