நவீனா சண்முகம் பரதநாட்டிய அரங்கேற்றம்
ஆகஸ்ட் 20, 2011 அன்று மாசசுசெட்ஸ் ஆஷ்லண்ட் உயர்நிலைப்பள்ளி அரங்கில் குரு ஸ்ரீதேவி அஜய் திருமலை அவர்களின் நாட்டியமணி நடனப் பள்ளி மாணவி நவீனா சண்முகத்தின் நடன அரங்கேற்றம் நடைபெற்றது. நிகழ்ச்சி தோடைய மங்களம் ரகமாலிகையுடன் ஆரம்பமானது. பின்னர் விநாயக துதிக்கு அபிநயித்தார். சாவேரி ராகம் ஜதிஸ்வரம் தாளக்கட்டுடன் அமைந்திருந்தது. சப்தத்தில் முருகன் வர்ணனையும், அதற்கேற்ற அபிநயமும் அபாரம். அதேபோல் வர்ணமும் ஜதிகளும், தாளக்கட்டுடன் ரசிக்கும்படியாக அமைந்திருந்தது. நவீனா கிருஷ்ணனை வர்ணித்த விதம் எல்லோரயும் கவர்ந்தது. கதனகுதுகல ராகத் தில்லானா மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.

குரு ஜதி சொன்ன விதமும், ஒவ்வொரு பாடலுக்கும் தெளிவான விளக்கமும், ஆடலமைப்பும் குரு ஸ்ரீதேவியின் திறமைக்குச் சான்றாக அமைந்திருந்தன. நிகழ்ச்சிக்கு மெருகூட்டிய பக்கவாத்தியக் குழுவினர்: குரு ஸ்ரீதேவி அஜய் திருமலை (நட்டுவாங்கம்), ஸ்ரீநிதி மத்தூர் (பாட்டு), ஹரி ரங்கசாமி (மிருதங்கம்), நரசிம்மமூர்த்தி ராமமிஷ்ரா (புல்லாங்குழல்), தாரா (வயலின்).

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com