நிவேதிதா ராவ் அரங்கேற்றக் கச்சேரி
ஜூன் 4, 2011 அன்று, கலிபோர்னியா வளைகுடாப் பகுதியின் ஃப்ரீமாண்ட் நகரத்திலுள்ள, லதா ஸ்ரீராம் அவர்களின் 'லலிதகான வித்யாலயா' மாணவி நிவேதிதாவின் அரங்கேற்றக் கச்சேரி மில்பிடாஸ் ஸ்ரீ ஷிர்டி சாயிபாபா கோவிலில் நடைபெற்றது.

ஸ்ரீராகத்தில் விறுவிறுப்பாக ஆரம்பித்தது கச்சேரி. நிவேதிதா சுமார் 2 மணிநேரம் தொடர்ந்து சக்ரவாகம், நாட்டை, மோஹனம், ஸஹானா, கல்யாணி, காபி, செஞ்சுருட்டி, பாக்யஸ்ரீ, சுபபந்துவராளி, சுருட்டி, திருப்புகழ் என்று விதவிதமாகப் பாடி அசத்தினார். தியாகராஜரின் கல்யாணி ஸாஹித்யத்தில் விஸ்தாரமாக நிகழ்த்திய ஸ்வரப்ரஸ்தாரம், ரசிகர்களின் கரவொலியைப் பெற்றது. ஸ்ரீராகத்தில் இரண்டு உருப்படிகள் இடைவெளி விட்டுப் பாடியது, வெவ்வேறு வாக்கேயக்காரர்களின் சாகித்யங்கள் என்பது பளிச்சென்று தெரிந்தது. லக்ஷ்மி பாலசுப்ரமண்யா வயலினும், ரவீந்த்ர பாரதி மிருதங்கமும் பக்கம் வாசித்தது சிறப்பு. நிவேதிதாவின் பெற்றோர் ரமேஷ், ரமாதேவி ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர்.

E.G. சுப்ரமணியன்,
ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com