ஹன்ட்ஸ்வில்லில் தமிழ்ப் புத்தாண்டு விழா
ஏப்ரல் 16, 2011 அன்று ஹன்ட்ஸ்வில் தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டு விழாவை ஹெரிடேஜ் தொடக்கப் பள்ளியில் கொண்டாடியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. விழாவில் தமிழர்கள் மட்டுமல்லாமல், பல மாநில மக்களும் பங்கு பெற்றனர்.

பரத நாட்டியத்துடன் தொடங்கிய கலை நிகழ்ச்சிகள், சிறார்களின் நடனம், நாடகம், பெரியவர்களின் நகைச்சுவை நாடகம், இளநங்கையரின் நடனம் எனப் பல அம்சங்களையும் கொண்டிருந்தது. இறுதியில் சுவையான தென்னிந்திய உணவு வழங்கப்பட்டது. விழாவைச் சிறப்பாக நடத்திக் கொடுத்த தாரணி ரவீந்திரன் மற்றும் குழுவினருக்குப் பாராட்டுக்கள்.

பிருந்தா ஐயர்,
அலபாமா.

© TamilOnline.com