விடியல்


தென் இந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் துணைச் செயலாளர் செல்வராஜ் இயக்கும் படம் விடியல். இப்படத்தில் சரத்குமார் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இவர்களுக்கு ஜோடியாக ஸ்நேகா, ஹேமமாலினி ஆகியோர் நடிக்கின்றனர். இசை: தினா. தயாரிப்பு: கிரிகுஜா இண்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஆர்.ஆர்.ஆர். பில்ம்ஸ் பேனர். இப்படத்தைப் பற்றி இயக்குனர், "1946, 1976 மற்றும் 2010 என மூன்று கால கட்டங்களில் இப்படத்தின் கதை நகர்கிறது" என்கிறார். சரத்குமாரும் ஸ்நேகாவும் முதன்முதலாக ஜோடியாக நடிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அரவிந்த்

© TamilOnline.com