ஷாம் நடிக்கும் 6


ஷாம் மூன்று வேடங்களில் நடிக்கும் படம் 6. இதனை முகவரி, நேபாளி போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய வி.ஏ. துரை இயக்குகிறார். இந்தப் படம் தனக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்கிறார் ஷாம். மூன்றும் வெவ்வேறு விதமான கெட்டப்புகள் என்பதால் அதற்காக மிகக் கடுமையாகத் தன்னை உருமாற்றிக் கொண்டு வரும் ஷாம், தனக்கு வந்த தெலுங்குப் பட வாய்ப்புகளைக் கூடத் தவிர்த்துவிட்டார். அந்த அளவுக்கு வித்தியாசமான கதையம்சம் உள்ள படமாம் இது.

அரவிந்த்

© TamilOnline.com