கணிதப் புதிர்கள்
1. a, b, c என்ற எண்களின் கூட்டுத் தொகை 20; (6-a)(6-b)(6-c) = 2 வருகிறது என்றால் a, b, c யின் மதிப்பு என்ன?


2. ஒரு மரத்தில் இரு கிளைகள் இருந்தன. கிளை ஒன்றில் சில பறவைகளும், கிளை இரண்டில் சில பறவைகளும் இருந்தன. கிளை ஒன்றில் இருந்து ஒரு பறவை கிளை இரண்டுக்குச் சென்றால், இரண்டாவது கிளையில் உள்ள பறவைகளின் எண்ணிக்கை முதற் கிளையில் உள்ள பறவைகளின் எண்ணிக்கையில் பாதியாகி விடுகிறது. கிளை இரண்டிலிருந்து ஒரு பறவை கிளை ஒன்றுக்குச் சென்றால், கிளை ஒன்றில் உள்ள பறவைகளின் எண்ணிக்கை கிளை இரண்டில் உள்ள பறவைகளின் எண்ணிக்கையைப் போல் ஐந்து மடங்கு ஆகி விடுகிறது. அப்படியென்றால் இரண்டு கிளைகளிலும் எத்தனை பறவைகள் இருந்திருக்கும்?

3. ab + cd = 38
ac + bd = 34
ad + bc = 43
என்றால் a, b, c, d இவற்றின் மொத்த மதிப்பு என்ன?

4. ஒரு குதிரை ஒரு நிமிடத்திற்கு 75 மீட்டர் நடக்கிறது. ஓர் ஈ ஒரு நிமிடத்தில் 150௦ மீட்டர் பறக்கிறது. நடந்துகொண்டிருக்கும் குதிரையின் நெற்றியிலிருந்து அந்த ஈ ஒரு நிமிடம் முன்னால் பறந்து சென்று மீண்டும் குதிரையின் நெற்றியை வந்தடைகிறது என்றால் அந்த இடைப்பட்ட நேரத்தில் குதிரை எவ்வளவு தூரம் நடந்திருக்கும்?

5. இரண்டு ஐந்து இலக்க எண்களைப் பெருக்கினால் வரும் விடை 123456789. அவற்றைக் கூட்டினால் வரும் விடை = 22230. அந்த எண்கள் எவை?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com