ஈஷா அறக்கட்டளை வழங்கும் 'Inner Engineering with Sadhguru'
2011 ஏப்ரல் 30, மே 1 தேதிகளில் ஈஷா அறக்கட்டளை 'உள்முகப் பொறியியல்' என்ற இணையவழி நிகழ்ச்சியையும் நேரடி 'சாம்பவி மஹாமுத்ரா' பயிற்சியையும் Marin Center Exhibit Hall அரங்கில் வழங்கவுள்ளது. புராதன அறிவியலான யோகத்தின் மூலம் ஆற்றல் பெருக்கம், தனிநபர் வளர்ச்சி ஆகியவற்றைத் தரும்படி வடிவமைக்கப்பட்ட நிகழ்ச்சி ஆகும் இது.

முதலில் இணையவழிப் பயிற்சி முடித்தபின் இரண்டு நாள் நேரடி தீவிரப் பயிற்சி தரப்படும். இணையவழிப் பயிற்சி 7 வகுப்புகள் கொண்டது. இதை முடித்தவர்கள் மட்டுமே 'சாம்பவி மஹாமுத்ரா'வுக்கான 2 நாள் நேரடிப் பயிற்சியில் பங்கேற்க முடியும்.

உள்முகப் பொறியியலை வடிவமைத்துள்ள சத்குரு வாசுதேவ் அவர்கள், 25 ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாக இந்த 2 நாள் பயிற்சியை நேரடியாக வழங்குகிறார். "நமது வெளிப்புற நலத்தை இயற்பியல் கவனித்துக் கொள்வது போல, அறிவியலின் ஒரு முழுமையான உட்பரிமாணம் நமது உள்முக நலத்தை உண்டாக்குகிறது. அதைத்தான் நான் 'உள்முகப் பொறியியல்' என்று கூறுகிறேன் என்கிறார் சத்குரு.

யோகியும் சித்தருமான சத்குரு வாசுதேவ், தீர்க்கதரிசியும் மனிதநேயரும் ஆவார். உலகப் பொருளாதார அரங்கு, ஐக்கிய நாடுகள், TED போன்றவற்றில் உரையாற்றியுள்ள இவர் 50 மிகச் செல்வாக்கான இந்தியர்களில் ஒருவர் ஆவார்.

"கருத்தாழம் கொண்ட, அழகான, நகைச்சுவை நிரம்பிய, ஞானமுள்ள, இயல்பான மனிதராவார் சத்குரு. நான் ஈஷாவின் இரண்டு பயிற்சிகளை மேற்கொண்டுள்ளேன். எல்லோரும் இதை முயற்சிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன். தவற விடாதீர்கள்" என்கிறார் நடிகர் ஏஞ்சலிகா ஹஸ்டன். 'உள்முகப் பொறியியல்' நிகழ்ச்சி வழியே லட்சக்கணக்கானவர்களுக்குத் தம் ஆற்றலின் உச்சத்தைத் தொட சத்குரு உதவியுள்ளார்.

இதைப் பற்றி மேலும் அறியவும், பங்கேற்கப் பதிந்து கொள்ளவும்: www.innerengineering.com/ready

பங்கேற்புக்கட்டணம்:
ஆன்லைன் நிகழ்ச்சி (7 வகுப்புகள்) - $150
ஆன்லைன் 7 வகுப்புகள் + சாம்பவி மஹாமுத்ரா - $299

சான் பிரான்சிஸ்கோ பே நிகழ்வின் இறுதியில் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் www.nannool.com தமிழ் புத்தக இணையதளத்தைத் திறந்து வைக்க உள்ளார். இந்தத் தளம் புத்தகங்களுக்கென்றே வடிவமைக்கப்பட்டதாகும். இங்கு தமிழ் படைப்புகளை தேடுதல் எளிது. நன்னூல்.காம் 132 பதிப்பகங்கள் மற்றும் 30000க்கும் மேற்ப்பட்ட நூல்களை வகைவாரியாகப் பிரித்து விற்பனை வைத்துள்ளது. வீடுதோறும் ஒரு தமிழ் நூலகம் என்பதே நன்னோல்.காம்-ன் கனவு.

செய்திக் குறிப்பிலிருந்து

© TamilOnline.com