ஜப்பான் சுனாமி நிவாரணத்திற்கு அமிர்தானந்தமயி மைய இசை நிகழ்ச்சிகள்
மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி மையம் (M.A. Center) ஜப்பான் சுனாமி நிவாரண பணிகளுக்கு உதவும் வகையில், பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது.

ஏப்ரல் 15, 2011 அன்று மாலை 6:45 முதல் 8:45 மணி வரை, விரிகுடாப் பகுதியின் பிரபல பாடகர் சங்கீதா சுவாமிநாதனின் இசை நிகழ்ச்சி மேற்கண்ட மையத்தில் நடைபெற உள்ளது. சங்கீதா சுவாமிநாதன், சுதா ரகுநாதனிடம் இசை பயின்றவர். நிகழ்ச்சியில் ஸ்ரீராம் பிரம்மானந்தம் (மிருதங்கம்), லஷ்மி பாலசுப்பிரமணியம் (வயலின்) ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

மே 1, 2011 அன்று மாலை 3:30 முதல் 7 மணி வரை, விரிகுடாப் பகுதியின் பிரபல இசைவல்லுனர்கள் Dr. சரவணபிரியனின் வயலின் இசை மற்றும் பிரசாத் பந்தார்கரின் புல்லாங்குழல் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீராம் பிரம்மானந்தம் (மிருதங்கம்), விகாஸ் யண்ட்லூரி (தபலா) ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

நிகழ்ச்சிகளில் திரட்டப்படும் நிதி, மாதா அமிர்தானந்தமயி மையத்தின் ஜப்பான் சுனாமி நிவாரணப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.

உலகெங்கிலும் உள்ள "அம்மா" மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி தேவி அவர்களின் மடங்கள் துன்பப்படும் மக்களுக்குச் சேவை செய்து வருகின்றன. 2004ம் வருட சுனாமியில் பாதிக்கப்பட்ட தமிழகம் உள்பட தென்மாநிலங்களில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்காக, மாதா அமிர்தானந்தமயி ரூ. 100 கோடி (23 மில்லியன் அமெரிக்க டாலர்) நிதி உதவி அளித்தது தெரிந்ததே. சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டித் தரப்பட்டன, அவர்களது குடும்பங்களுக்கு உதவி நிதி, உணவு, உடை மற்றும் மருத்துவ உதவிகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவசக் கல்வி மற்றும் வேலைப் பயிற்சி மற்றும் பல உதவிகள் வழங்கப்பட்டன (பார்க்க: Tsunami).

2005ம் வருடம், அமெரிக்காவின் கட்ரீனா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, புஷ்-கிளின்டன் நிவாரண நிதிக்கு, மாதா அமிர்தானந்தமயி மடம் 1 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவி அளித்தது.

நிகழ்ச்சிகள் பற்றி மேலும் விபரங்களுக்கு: bayarea.amma.org

இடம்: M.A. Center, சான் ரமோன்
நுழைவுச்சீட்டு: $25 (இரவு உணவு உள்பட), 8 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இலவசம்
நன்கொடை மற்றும் நுழைவுச்சீட்டுக்கு: 510-371-1426 / 408-216-7442 / 925-556-4363

சூப்பர் சுதாகர்

© TamilOnline.com