IFAASD நடத்தும் சான் டியேகோ இசைவிழா
2011 ஏப்ரல் 14 முதல் 17 வரை சான் டியேகோவில் நான்காவது ஆண்டாக இசை, நாட்டிய விழா ஒன்றை Indian Fine Arts Academy of San Diego நடத்த இருக்கிறது. மொத்தம் 58 கலைஞர்கள் பங்கேற்கும் இந்த விழா Jewish Community Center, La Jolla, Ca-வில் நடைபெறும். விழாவின் சிகரமாக சிதார் மேதை பண்டிட் ரவி சங்கர் அவர்களின் 91வது பிறந்தநாள் விழாக் கொண்டாட்டத்தில் தன் குருவுக்கு இசைக் காணிக்கை சமர்ப்பிக்க பிரபல பாலிவுட் கலைஞர் சங்கர் மஹாதேவன் வருகிறார்.

நிகழ்ச்சிகள்:
ஏப்ரல் 14: சஷாங்க் புல்லாங்குழல் இசை.
ஏப்ரல் 15: பத்மவிபூஷண் பாலமுரளிகிருஷ்ணா பங்கேற்கும் ஜுகல்பந்தி ஏப்ரல் 16: 13 நாட்டியக் கலைஞர்களும், 10 இசைக் கலைஞர்களும் பங்குபெறும் பால காண்டம், சீதா கல்யாணம் நாட்டியம். முதன்முறையாக வட அமெரிக்காவில் அரங்கேறும் இந்த நாட்டிய நிகழ்ச்சிக்கு, இங்கே பிறந்து வளரும் இளம் தலைமுறையினரும் எளிதாகப் புரிந்துகொள்ளும்படி எழுதி, சிறந்த முறையில் இசை அமைத்திருக்கிறார் சித்ரவீணா ரவிகிரண். இந்த நாட்டியச் சித்திரத்திற்கு சாவித்ரி ஜகன்னாத ராவ் நாட்டிய வடிவம் கொடுத்திருக்கிறார்.
ஏப்ரல் 16: நாட்டியம்; கணேஷ்-குமரேஷ் வயலின் இசை; பத்மவிபூஷண் ஆர்.கே. ஸ்ரீகண்டன் கச்சேரி.
ஏப்ரல் 17: லாவண்யா அனந்த் நாட்டியம்; புர்பயன் சட்டர்ஜியின் சிதார் கச்சேரி.

இசைக் கச்சேரிகளோடு வெஜிடேரியன் உணவும் கிடைக்கும் என்பது ப்ள்ஸ் பாயிண்ட். குறைந்தபட்சம் 5000 ரசிகர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீட்டுகளை முன்பதிவு செய்துகொள்ள:
இணையதளம்: www.indianfinearts.org
மின்னஞ்சல்: சேகர் விஸ்வனாதன் - shekar.viswanathan@gmail.com

கீதா பென்னட்

© TamilOnline.com