அம்புலி


அஜய், பி.எஸ்.ஸ்ரீஜித், சனம், திவ்யா ஆகியோர் நடிக்கும் படம் அம்புலி. 3டி படமாக உருவாகும் இப்படத்தில் பார்த்திபன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், ராஜேந்திரன், ஜெகன் உமாரியாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சில பழங்கால நாட்டுப்புற நம்பிக்கைகளால் ஒரு கிராமமே பயந்து நடுங்குகிறது. அவர்கள் பயத்தைப் போக்க இரண்டு இளைஞர்கள் அந்தக் கிராமத்திற்கு வந்து சேர்கின்றனர். அவர்களுக்கு என்ன ஆனது, மக்களின் பயம் மாறியதா என்பதைத் திடுக்கிட வைக்கும் காட்சிகளுடனும், பிரம்மாண்டமான கிராஃபிக்ஸ் காட்சிகளுடனும் சொல்ல வருகிறது அம்புலி. தாமரை, நா.முத்துக்குமார், நெல்லை ஜெயந்தாவின் பாடல்களுக்கு வெங்கட் பிரபு சங்கர் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகின்றனர், ஹரி சங்கர், ஹரீஷ் நாராயண் என்ற இரட்டையர்கள்.

அரவிந்த்

© TamilOnline.com