கணிதப் புதிர்கள்
1. மாலாவின் வயதைப்போல நீலாவின் வயது இருமடங்கு. 12 வருடங்களுக்கு முன்னால் நீலாவின் வயது, மாலாவின் வயதைப்போல மும்மடங்காக இருந்தது என்றால் மாலா, நீலாவின் தற்போதைய வயது என்ன?

2. சோமுவிடம் இருக்கும் பந்துகளைப்போல் இரு மடங்கு ராமுவிடம் உள்ளது. இருவரிடமும் உள்ள பந்துகளின் மொத்த எண்ணிக்கை 30. சோமு, ராமு ஒவ்வொருவரிடமும் உள்ள பந்துகளின் எண்ணிக்கை என்ன?

3. 214, 183, 152, 121, ... வரிசையில் அடுத்து வரும் எண் என்னவாக இருக்கும்? காரணம் யாது

4. இரண்டு கூடைகளில் சில ஆப்பிள்கள் இருந்தன. முதல் கூடையில் இருக்கும் பழங்களை விட இரண்டாவது கூடையில் எட்டுப் பழங்கள் குறைவாக இருந்தன. இரண்டாவது கூடையில் இருந்த பழங்களை விட அரைப்பங்கு அதிகமாக முதல் கூடையில் பழங்கள் இருந்தன என்றால் இரண்டு கூடைகளிலும் இருந்த ஆப்பிள்களின் எண்ணிக்கை என்ன?

5. சங்கர் மற்றும் சாமியின் எடை தற்போது 6:7 என்ற விகிதத்தில் உள்ளது. அதுவே சென்ற வருடம் 5:8 என்ற விகிதத்தில் இருந்தது. சங்கரின் எடை சென்ற வருடத்தை விட 6 கிலோ கூடியுள்ளது. சாமியின் எடையோ சென்ற வருடத்தை விட 6 கிலோ குறைந்துள்ளது என்றால் அவர்களின் முந்தைய எடை எவ்வளவு?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com