எல்லாமே புதுசு!
இதுவரைக்கும் நீங்க செய்து பாக்காத பலகார வகைகள் இவை. முயன்றுதான் பாருங்களேன்.

பலதானிய வடை

தேவையான பொருட்கள்
சோயா - 2 மேசைக்கரண்டி
பச்சைப்பயறு - 2 மேசைக்கரண்டி
காராமணி- 2 மேசைக்கரண்டி
கொள்ளு - 2 மேசைக்கரண்டி
துவரம் பருப்பு - 1/4 கிண்ணம்
கறுப்பு உளுந்து - 1/4 கிண்ணம்
கேழ்வரகு - 2 மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு - 1/4 கிண்ணம்
புழுங்கலரிசி - 1/4 கிண்ணம்
வெந்தயம் - 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 7
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
வெங்காயம் (சீவியது) - 1/4 கிண்ணம்
காரட் (சீவியது) - 1/4 கிண்ணம்
இஞ்சி - சிறு துண்டு
உப்பு - சிறிதளவு
கொத்துமல்லி - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - பொரிக்க

செய்முறை
எல்லாப் பருப்புகளையும் மூன்று மணிநேரம் ஊறவிட்டுக் களைந்து, புழுங்கலரிசியையும் களைந்து உப்பு, மிளகாய், மிளகு, சீரகம் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும். இதில் இஞ்சி, வெங்காயம், காரட் போடவும். வெந்தயத்தையும் அரைக்கும்போதே சேர்த்துக்கொண்டு அரைத்து, கறிவேப்பிலை, கொத்துமல்லி நறுக்கி மாவுடன் கலக்கவும். எண்ணெயில் வடை தட்டிப் பொரித்து எடுக்கவும். தக்காளி, தேங்காய்ச் சட்னியுடன் சாப்பிடலாம். பொன்னிறமாக, சாப்பிட மிகச் சுவையாக இருக்கும்.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com