அரும்புமீசை குறும்புப்பார்வை


'அரும்புமீசை குறும்புப்பார்வை' என்ற இளமை துள்ளும் பெயரில் புதிய படம் ஒன்றை இயக்கிக் கொண்டிருக்கிறார் அறிமுக இயக்குநர் வெற்றிவீரன். இவர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர். கணவனை இழந்தை பெண் ஒருவர் தன் மகனைக் கஷ்டப்பட்டு படிக்க வைக்க, அவனுக்குக் காதல் அரும்புகிறது. சிறுவயதில் மிட்டாய் பரிமாறிக் கொள்வதில் சண்டை போடுவது போல வளர்ந்தும், நாயகன், நாயகி சண்டை போட அதனால் விளையும் ஊடலும் காதலும்தான் படத்தின் கதை. விளம்பரப் படங்களுக்கு இசையமைத்து வந்த முகம்மது ரிஸ்வான் இப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

அரவிந்த்

© TamilOnline.com