கரண் நடிக்கும் சூரன்


அரவோணா பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'சூரன்'. கரண் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக அனுமோல். ஷிஃபாலி ஷர்மா மற்றொரு நாயகியாக அறிமுகமாகிறார். மணிவண்ணன், பொன்வண்ணன், மகாதேவன், ஜெகன் உள்ளிட்டோர் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கின்றனர். இயக்குநர் பாலு நாராயணன் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். பலரும் அறியாத வடசென்னையின் முகத்தை இப்படத்தில் விரிவாக அறியத் தர இருப்பதாகக் கூறும் இயக்குநர், எதிரிகளின் பயமும், மரண பயமும் துரத்த, பரபரப்போடு அப்பகுதியில் வாழ்ந்த ஒரு மனிதனின் கதை இது என்கிறார். (நிறைய தக்காளி சாஸ் பயன்படுத்தியிருப்பீங்கன்னு சொல்லுங்க!)

அரவிந்த்

© TamilOnline.com