உங்க வீட்டு பிள்ளை
முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்தின் பேரன் விஷ்ணு சரண் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் உங்க வீட்டு பிள்ளை. கதாநாயகியாக பெங்களூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஆஷிகா புஞ்சா அறிமுகமாகிறார். மற்றொரு நாயகியாக கேரளத்தைச் சேர்ந்த சுரபி அறிமுகமாகிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் பிரசாந்த். இவர் ஏற்கனவே மலையாளத்தில் மோகன்லால் நடித்த 'பகவான்', கன்னடத்தில் சிவராஜ்குமார் நடித்த 'சுக்ரீவர்' ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். முழுக்க முழுக்க கிராமத்துக் கதையான உங்கள் வீட்டுப் பிள்ளை, நல்ல பொழுதுபோக்குப் படமாக இருக்கும் என்கிறார் இயக்குநர். (அரசியல்வாதி பேரனுக்கேத்த தலைப்புதான்)



அரவிந்த்

© TamilOnline.com