தெரியுமா?: வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்கள்
வண்ணத்துப் பூச்சியில் இறகில் வரையப்பட்ட வடிவங்களையும் நிறங்களையும் வியக்காதவர் யார்! அதன் வானவில் வண்ணங்களை ஆராய்ந்த அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வினோத் குமார், சாரநாதன் ஆகியோர், செல்களின் அமைப்புதான் அதற்குக் காரணம் என்று கண்டறிந்துள்ளனர். மனிதர் உட்படப் பிற உயிரினங்களில் நிறமிகளே வண்ணத்தை நிர்ணயிக்கும். ஐந்து வகையான வண்ணத்துப் பூச்சிகளை ஆய்ந்த அவர்கள், அவற்றின் இறகுகளில் உள்ள கைராய்டு எனப்படுபவை படிகம் போலச் (crystal) செயல்பட்டு ஒளிச்சிதறல் ஏற்படுத்துவதால்தான் வர்ண ஜாலம் தோன்றுகிறது என்கிறார்கள்.© TamilOnline.com