மார்ச் 2011: ஜோக்ஸ்
அவன்: சர்ஜனுக்கும் நடிகருக்கும் என்ன ஒத்துமை சொல்லு பார்க்கலாம்!
இவன்: இரண்டு பேருமே ஏதாவது தியேட்டர்ல, யாரையாவது போட்டு அறுத்துக்கிட்டிருப்பாங்க, சரியா?

*****


நோயாளி: நீங்க சொந்தமா வீடு கட்டிக்கிட்டிருந்தீங்களே, அந்த வேலை முடிஞ்சிடுத்தா டாக்டர்?
டாக்டர்: இன்னும் ரெண்டு மூணு மாசம் ஆகும். ஆமாம், ஏன் அடிக்கடி அதைப் பத்தி விசாரிக்கறீங்க...
நோயாளி: நான் எப்போ டிஸ்சார்ஜ் ஆவேன்னு தெரிஞ்சிக்கத்தான்.

*****


சுந்தர்: நம்ம டீச்சருக்கு என்னவோ ஆயிருச்சிடா..
சந்தர்: ஏண்டா அப்படிச் சொல்றே?
சுந்தர்: பின்ன, திருக்குறள அவங்களே போர்டுல எழுதிப் போட்டிட்டு இதை எழுதியவர் யாருன்னு கேட்கறாங்களே.

*****


ராதா: நாம்பளுந்தான் நாலு வருஷமா காதலிக்கறோம், நீங்க கல்யாணத்தைப் பத்தி மட்டும் பேசவே மாட்டேங்குறீங்களே...
காதலன்: சரி ராதா, சொல்லு.. எப்போ உனக்குக் கல்யாணம்?

*****


ராமு: அவர் ரொம்பச் சிக்கனப் பேர்வழி.
சோமு: எப்படிச் சொல்றே...
ராமு: எப்ப கடைக்குப் போனாலும் வாழைப்பழத்தை மட்டும்தான் வாங்குவாரு. ஏன்னா அதுதான் ‘சீப்’பாக் கிடைக்குதாம்.

*****


"அம்மா... இனிமே என்னை ராப்பிச்சைன்னு கூப்பிடாதீங்க... Beggerனு கூப்பிடுங்க...
"ஏம்பா..?"
"பேர்ல 2G வந்தா ஒரு மதிப்பா இருக்கும்லே..."

அதிரை யூசுப்,
சன்னிவேல், கலிஃபோனியா

*****


"எதுக்கு அந்த டாக்டர் மேல கேஸ் போட்டாங்க?"
"எக்ஸ்ரேயில கிராபிக்ஸ் செஞ்சு எலும்பு முறிவு இருக்குன்னு பொய் சொன்னாராம்..."

அதிரை யூசுப்,
சன்னிவேல், கலிஃபோனியா

*****

© TamilOnline.com